மனைவியை கொலை செய்த இலங்கை தமிழர் வழக்கில் அதிரடி திருப்பம்!

Report Print Balamanuvelan in கனடா

மனைவியை கொலை செய்த இலங்கைத் தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் கனடாவில் இல்லாத நிலையிலும், அவர் மீதான் வழக்கை மீண்டும் தொடங்க கியூபெக் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

நேற்று கனடா உச்ச நீதிமன்றம் சிவலோகநாதன் தனபாலசிங்கத்தின் வழக்கை மீண்டும் கியூபெக் நீதிமன்றம் எடுத்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தனபாலசிங்கம் தனது மனைவியை கொலை செய்த வழக்கில் அவரது கைதுக்கும் அவரது விசாரணைக்கும் இடையில் 60 மாதங்கள் தாமதம் முறையானதல்ல என்று கூறியதையடுத்து அவர் விசாரணையிலிருந்து தப்பினார்.

தனபாலசிங்கத்தின் மனைவி அனுஜா பாஸ்கரன், தம்பதியர் வாழ்ந்த வீட்டில் கழுத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

அந்த கொலைக் குற்றச்சாட்டுக்கு இடைக்காலத்தடை வாங்கியதைத் தொடர்ந்து தனபாலசிங்கம் சமுதாயத்துக்கு ஆபத்தானவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, புலம்பெயர்தல் அதிகாரிகளால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னரே 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனபாலசிங்கம் நாடு கடத்தப்பட்டார்.

தற்போது கீழ் நீதிமன்றத்தின் முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர் கனடாவில் இல்லையென்றாலும் அவர் மீதான வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers