இலங்கை குண்டு வெடிப்பில் தங்கள் உறவினர்களை இழந்து கதறும் கனடா வாழ் இலங்கையர்கள்!

Report Print Balamanuvelan in கனடா

ஆல்பர்ட்டாவில் வாழும் இரண்டு இலங்கையர்கள், இலங்கையில் வாழும் தங்கள் உறவினர்கள் குண்டு வெடிப்பில் உயிரிழந்ததை அறிந்து கதறி கண்ணீர் வடிக்கின்றனர்.

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 200க்கும் மேலானவர்கள் உயிரிழந்ததோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து Calgaryக்கு 2007ஆம் ஆண்டு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர் Dilina Fernando (17).

ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் தனது உறவினர்களான M. Lahiru மற்றும் Sudhiva Fernando மற்றும் Lahiruவின் மனைவியான M. Diliniee ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி கேட்ட Dilinaவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்தி வந்து கொண்டே இருக்கிறது.

கேட்பதற்கு கஷ்டமாக இருக்கிறது, மிகவும் அதிர்ந்து போயிருக்கிறோம் என்கிறார் Dilina.

நாங்கள் என்ன மன நிலையில் இருக்கிறோம் என்பதை விவரிக்க இயலாத நிலையில் இருக்கிறோம் என்கிறார் அவர்.

குண்டு வெடிப்பு நடந்த இடம் ஒன்றிற்கு அருகில் தனது குடும்பம் முன்பு வசித்ததாக Dilina தெரிவிக்கிறார்.

உயிர்த்தெழுதல் தினத்தன்று இந்த சம்பவம் நடந்தது தன்னை அதிர்ச்சி மற்றும் வேதனைக்குள்ளாக்கியிருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.

Samith Warnakulasuriya தனது காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது இலங்கையிலிருந்து அவரது தாயார் தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.

ஆம்புலன்ஸ்களின் சத்தத்தையும் மக்கள் அலறும் சத்தத்தையும் Warnakulasuriya தொலைபேசியில் கேட்டிருக்கிறார்.

சத்தத்திற்கிடையில் தனது தாய் தங்கள் குடும்பம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்ததோடு, சற்று முன்னர்தான் Negomboவில் உள்ள தேவாலயம் ஒன்றில் குண்டு வெடித்ததை கண்ணால் பார்த்ததாக தெரிவித்திருக்கிறார்.

செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்குள்ளான Warnakulasuriya, என்ன செய்வதென்று அறியாமல் காரை சாலையோரம் நிறுத்தி விட்டிருக்கிறார்.

அமைதி நாடி செல்லும் ஒரு தேவாலயத்தில் குண்டு வெடிக்கும் என தனது குடும்பத்தினரால் எண்ணிக்கூட பார்க்க இயலவில்லை என தெரிவிக்கிறார் அவர்.

இலங்கையில் St. Sebastian தேவாலயத்துக்கு சென்றிருந்த அவரது பெற்றோரும் சகோதரிகளும் ஆலயத்தினுள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவாலயத்திற்கு வெளியே அமர தீர்மானித்திருக்கிறார்கள்.

அந்த தீர்மானம் அவர்களை காப்பாற்றியிருக்கிறது. என்றாலும் அவர்களது நண்பர்கள் பலர், உறவினர்கள் பலர் அந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்திருக்கிறார்கள்.

நான் இலங்கைக்கு திரும்ப போகும்போது, அவர்கள் அங்கிருக்க மாட்டார்கள், அது எனக்கு பெரிய அதிர்ச்சி என்று கூறும் Warnakulasuriya, நான் கனடாவிற்கு வரும் முன் பேசிய பலருடன் இனி பேச முடியாது என கண்ணீருடன் தெரிவிக்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்