என் மகனை தீவிரவாதி என்று அழைக்க வேண்டாம்: கனடா பிரதமரை வலியுறுத்தும் நபர்!

Report Print Balamanuvelan in கனடா

கியூபெக் நகர் மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் தந்தை, தனது மகனை தீவிரவாதி என அழைப்பதை நிறுத்துமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வலியுறுத்தியுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கியூபெக் நகரிலுள்ள மசூதி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தி ஆறு பேரின் உயிரிழப்புக்கும் ஆறு பேர் காயமடைவதற்கும் காரணமாக இருந்தவர் Alexandre Bissonnette.

கைது செய்யப்பட்ட Alexandreக்கு பிப்ரவரி மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு அவர் குறைந்தது 40 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வரமுடியாது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள Alexandreன் தந்தையான Raymond, தனது குடும்பத்திற்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது மகன் செய்த குற்றங்கள் மிகவும் பயங்கரமானவைதான் என்றாலும் அவனுக்கென்று தனிப்பட்ட கொள்கையோ தீவிரவாதிகளுடனான தொடர்போ இல்லை என்று தெரிவித்துள்ளார் அவர்.

தனது மகன் மீது தீவிரவாத குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும் ட்ரூடோவும் மற்றவர்களும் அவனை தீவிரவாதி அன்று குறிப்பிடுவதாக அவர் கூறுகிறார்.

தனது மகனை தீவிரவாதி என்று அழைப்பது தனது குடும்பத்தின்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக Raymond தெரிவித்துள்ளார்.

போன மாதம் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சரான Chrystia Freeland, ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த ஒரு விவாதத்தின்போது கியூபெக் நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு தீவிரவாதி ஆறு பேரைக் கொன்றான் என்று கூறினார்.

அதேபோல், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று இரவு ட்ரூடோவும் இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers