கனேடிய இளம்பெண்ணும் மகளும் மாயம்: சந்தேக வளையத்திற்குள் பிரித்தானியர்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் இரண்டு வாரங்களுக்குமுன் ஒரு இளம்பெண்ணும் அவரது மகளும் மர்மமான முறையில் காணாமல் போனதையடுத்து, பிரித்தானியர் ஒருவரை பொலிசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

Jasmine Lovett (25)மற்றும் அவரது மகள் Aliyah Sanderson ஆகிய இருவரும் இரண்டு வாரங்களுக்குமுன் மர்மமான முறையில் மாயமானார்கள்.

அதற்கு முந்தைய தினம் அவர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளரான Robert Leeming (34)உடன் வெளியே சுற்றியதற்கு சாட்சியங்கள் உள்ளதையடுத்து பொலிசார் அவரை சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தாங்கள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதாகவும், பின்னர் தான் ஒரு வேலையாக சென்று திரும்பியபோது Jasmineஐயும் அவரது மகள் Aliyahவையும் காணவில்லை என்றும் Robert தெரிவித்தார்.

Robertஐ கைது செய்த பொலிசார், விசாரணைக்குப்பின் அவரை விடுவித்துள்ளார்கள் என்றாலும் இன்னமும் அவர் பொலிசாரின் சந்தேக வளையத்திற்குள்ளேயே இருக்கிறார்.

இதற்கிடையில் Jasmineம் அவரது மகள் Aliyahவும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று Calgary பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers