நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்கள் உடல்கள் ஏன் இந்தியாவுக்கு கொண்டுவரப்படவில்லை: வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இந்தியரான ராம் நிவாஸ் மிஸ்ரா (38) மற்றும் அவரது இளைய மகன் ஆரவ் (9) ஆகியோரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பணப்பிரச்சினை காரணமாக தாமதம் ஏற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார். ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி வின்னிபெக் நகரிலுள்ள தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள நீச்சல் குளத்தில் மிஸ்ராவும் அவரது இரண்டு மகன்களும் மூழ்கிக் கிடந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் மிஸ்ராவும் ஆரவும் உயிரிழக்க, மிஸ்ராவின் மூத்த மகன் ஷ்ரேயான் மட்டும் உயிர் தப்பினான், அவனுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பணப்பிரச்சினை காரணமாக ராம் நிவாஸ் மிஸ்ரா (38) மற்றும் அவரது இளைய மகன் ஆரவ் (9) ஆகியோரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

பணப்பிரச்சினை காரணமாக ராம் நிவாஸ் மிஸ்ரா (38) மற்றும் அவரது இளைய மகன் ஆரவ் (9) ஆகியோரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் என வெளியாகிய செய்தியில் உண்மையில்லை என மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ், கனடாவைப் பொருத்தவரையில், இறந்தவர்களின் உடல்களை மருத்துவமனையிலிருந்து விடுவிக்க அவர்களது குடும்பத்தாரின் ஒப்புதல் வேண்டும்.

ஆனால் கணவனையும் மகனையும் இழந்த அதிர்ச்சியிலிருந்து மிஸ்ராவின் மனைவி அனுபமா மீளாத நிலையில் இருந்தார்.

அதனால் அவரால் தனது கணவர் மற்றும் மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து விடுவிக்க ஒப்புதலை தர இயலவில்லை.

தற்போது சற்று தேறியுள்ள மிஸ்ராவின் மனைவி, தனது கணவர் மற்றும் மகனின் இறுதிச் சடங்குகள் கனடாவிலேயே நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

அவரது விருப்பப்படியே இந்திய அரசு சார்பில் மிஸ்ரா மற்றும் அவரது மகனின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மிஸ்ராவின் 10 வயது மகன் உடல் நலம் தேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்