போதையில் காதலியை துப்பாக்கியால் காயப்படுத்திய நபர்: விடுவித்த நீதிமன்றம்!

Report Print Balamanuvelan in கனடா

ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த ஒருவர் பாலுறவின்போது விளையாட்டாக துப்பாக்கியை பயன்படுத்த, அது வெடித்ததில் அவரது காதலிக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டன. கவனக் குறைவாக துப்பாக்கியை பயன்படுத்தியதாக Matthew Bergh என்னும் அந்த காதலருக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த Matthew, தனது குற்றப் பின்னணிக்கும் மதுபானம் பயன்படுத்தும் பழக்கத்திற்கும் நீதிபதி அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக வாதிட்டார்.

சென்ற வாரம் நடந்த வழக்கு விசாரணையின்போது, Matthew தனது தவறுக்காக உண்மையாகவே வருந்தியதையும், மதுபானம் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக சிகிச்சை எடுத்துக் கொள்வதையும், தனது ஆயுதங்களை விற்றுவிட்டதையும் கவனத்தில் கொள்ள நீதிபதி தவறி விட்டதையும் மூன்று மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கண்டறிந்தனர்.

தனது காதலியுடனான பாலுறவின்போது, துப்பாக்கியில் குண்டுகள் இருப்பதை அறியாமல், Matthew துப்பாக்கியால் அவளது இடுப்பு, முதுகு மற்றும் பின்பக்கங்களில் தடவியதாகவும், அப்போது திடீரென எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Matthewவின் காதலியின் வயிற்றில் பாய்ந்த குண்டு, அவரது பின்பக்கம் வழியாக வெளியேறியது.

அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லையென்றாலும் உள்ளுறுப்புகளில் மோசமான காயங்கள் ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை தேவைப்பட்டதோடு, 18 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதாயிற்று.

பாலுறவின்போது Matthewவும் அவரது காதலியும் போதைப்பொருட்கள் அருந்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்டவர், சமுதாயத்திற்கு முக்கிய பங்காற்றுபவர், ஒரு குழந்தையை நன்றாகவும் உற்சாகத்துடனும் கவனித்துக் கொள்பவர் என்னும் விடயங்களையும், வீட்டில் திருடர்கள் நுழையும் அபாயம் இருப்பதாலேயே படுக்கையின் அருகே துப்பாக்கி வைத்திருந்ததையும் கவனிக்க முதலில் தீர்ப்பளித்த நீதிபதி தவறிவிட்டதாக தெரிவித்துள்ள மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், சிறைக்கு அனுப்புவது அவரை இத்தகைய குற்றங்களை செய்வதிலிருந்து விலக்காது என்று தெரிவித்து, Matthewவை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

சிறைக்கு செல்வதிலிருந்து தப்பினாலும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கும், ஆயுதங்கள் வைத்திருப்பதற்கும் Matthewவிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்