கர்ப்பிணிப்பெண் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு: பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அதிருப்தி!

Report Print Balamanuvelan in கனடா

பிரசவத்திற்கு இன்னும் சில வாரங்களே இருந்த நிலையில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ஜனவரி மாதம் ஒண்டாரியோவைச் சேர்ந்த Nicholas Baig தனது ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியான Arianna Goberdhanஐ கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

உடலில் 17 கத்திக் குத்துக் காயங்களுடன் இடுப்புக்கு கீழ் ஆடையின்றி தனது கணவரின் பெற்றோரின் வீட்டில் இறந்து கிடந்தார் Arianna. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Nicholasக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு, அவர் 17 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வரமுடியாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சற்றும் இரக்கமின்றி தங்கள் மகளை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த நபருக்கு இந்த தண்டனை போதாது என்று கூறி, அவரது பெற்றோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

குறைந்தது 20 ஆண்டுகளுக்காவது குற்றம் செய்த நபர் ஜாமீனில் வர முடியாது என தீர்ப்பு வரும் என்று எண்ணியதாக தெரிவிக்கும் Ariannaவின் பெற்றோர், இப்படித்தான் நாம் குடும்ப வன்முறையை தடுத்து நிறுத்தப்போகிறோமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவளுக்கு நீதியே கிடைக்கப்போவதில்லை என்று கூறிய Ariannaவின் தாய் Sherry, கனடாவில் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை உயிரிழக்க காரணமாக இருப்பவர்களுக்கு தண்டனை இல்லை என்பதால், அந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று கோரும் புகார் மனு ஒன்றை தயார் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers