கனடாவில் உபர் கால் டாக்சியில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு! புதிய ஒழுங்குமுறை அமல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உபர் கால் டாக்சியில் பயணம் செய்யும் பயணிகள் ஓட்டுனர்களிடம் இருந்து குறைந்த மதிப்பீடுகளை தொடர்ந்து பெற்றால் அவர்கள் டாக்சியில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா உபர் கால் டாக்சி இது தொடர்பான புதிய ஒழுங்குமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி உபரில் பயணிக்கும் பயணிகள் பயணத்தின் போது ஒழுக்கமாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கு சில முறை எச்சரிக்கை விடுக்கப்படும்.

தொடர்ந்து மீறினால், பயணிகளின் உபர் கணக்கு ஆறு மாதங்கள் வரை முடக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஒழுங்குமுறை இந்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

பயணிகள் மற்றும் ஓட்டுனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவே இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே உபர் காரில் புகைப்பிடிப்பது, அருகிலிருப்பவர்களை தவறாக தொடுவது, வன்முறை நடத்தையில் ஈடுபடுவது, குடிபோதையில் வாந்தி எடுப்பது போன்ற விடயங்களை செய்தால் காரில் பயணிக்க தடை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்