நண்டுகளால் மீன் வளர்ப்புக்கு ஏற்பட்ட இடைஞ்சல்: கிடைத்த தீர்வு என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் மீன் வளர்க்கும் ஒரு தம்பதிக்கு நண்டுகளால் பெரும் இடைஞ்சல் ஏற்பட்டது.

நண்டுகள் மீன் குஞ்சுகளை தின்று விடுவதால் Tonia Grandy தம்பதிக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

அவர்களும் நண்டுகளை ஒழிக்க என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஆனாலும் நண்டுகள் ஒழிந்தபாடில்லை. அவை என்ன கிடைத்தாலும் தின்று தீர்த்தன.

கடைசியாக Grandyக்கு ஒரு ஐடியா தோன்றியது, ’If you can't beat 'em, eat 'em’ என்ற முடிவுக்கு வந்தார் Grandy.

அதாவது உங்களால் அவைகளை ஒழிக்க முடியவில்லை என்றால் சமைத்து சாப்பிட்டு விட வேண்டியதுதான் என்கிறார் அவர். சமையல் புத்தகம் ஒன்றை வாங்கினார் Grandy.

அந்த புத்தகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அதிலுள்ள சமையல் அனைத்திலும் முக்கிய பயன்பாட்டுப் பொருள் நண்டுகள்.

நண்டு சூப், நண்டு சாண்ட்விச், நண்டு பீட்ஸா என எல்லா நண்டு சமையலும் அந்த புத்தகத்தில் இருந்தது.

அதோடு நிற்கவில்லை Grandy, அவரது வீட்டுக்கு அருகிலுள்ள ஹொட்டல் அதிபர் ஒருவரோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார், நண்டு சமையல் செய்யலாமா என்று.

கடைசியில் தனக்கு தொல்லை கொடுத்த நண்டுகளை உணவாக்கியதோடு அவற்றை வைத்தே ஒரு புதிய வருவாயும் பார்த்து விடுவார் போலிருக்கிறது Grandy.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்