இந்த அழகிய பெண் ஒரு பிரபலத்தின் மனைவி: அந்த பிரபலம் யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா

கனடாவைப் பொருத்தவரை அதன் பிரதமராகிய ஜஸ்டின் ட்ரூடோவைத்தான் உலக மக்கள் பலரும் பார்த்திருக்கிறார்கள், அந்த அளவுக்கு அவர் பல நாடுகளில் பிரபலமானவர்.

ஆனால் அவரது மனைவியின் படம் வெகு சில நிகழ்வுகளின்போது மட்டுமே பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது.

அதுவும் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சீக்கிய தீவிரவாதியுடன் நிற்கும் ஒரு படம் மிகவும் பிரபலமானது.

ஆனால் Sophie Grégoire Trudeau என்னும் பெயர் கொண்ட அவர், பாலின சமத்துவம், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர் என்பது பலருக்கும் தெரியாது.

பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் அதிகம் தலை காட்டாத Sophieக்கு 41 வயது, மூன்று குழந்தைகளுக்கு தாய் அவர்.

சிறு வயதில் bulimia என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தன்னைப்போன்றே பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் மன நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். பெண்ணியவாதிகளுக்கு ஆதரவளிப்பவர் Sophie.

கனேடிய பிரதமரின் மனைவி என்ற முறையில் பல சர்வதேச நாடுகளுக்கு தனது கணவருடன் செல்லும் Sophie, அந்த பயணங்களை தனது செய்திகளை சொல்லும் சந்தர்ப்பங்களாக பயன்படுத்திக் கொள்கிறார்.

என்ன செய்தாலும் தனது குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் Sophie என்பதை நிச்சயம் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்