இளம்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு ஜாமீன்: நீதித்துறை துரோகம் செய்து விட்டதாக கதறும் பெற்றோர்!

Report Print Balamanuvelan in கனடா

பத்திரிகைகளில் எழுத இயலாத அளவுக்கு கோரமாக வன்புணர்வு செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் கொலையாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம், அவரது பெற்றோரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

2010ஆம் ஆண்டு, Kimberly Proctor, 18 வயதாக இருக்கும்போது அவரது வகுப்பு தோழர்களால் கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

2011 ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி, கொலை, சித்திரவதை, வன்புணர்வுக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட Kruse Wellwood (16) மற்றும் Cameron Moffat (17) ஆகியோருக்கு 10 ஆண்டுகளுக்கு வெளிவர இயலாத ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.

ஆனால் தற்போது அவர்கள் பகல் நேர ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளதோடு, அடுத்த ஆண்டு ஜூனில் முழு ஜாமீனில் விடுவிக்கப்பட உள்ளதாக தேசிய ஜாமீன் போர்டு தெரிவித்துள்ளது.

இதனால் Kimberlyயின் பெற்றோர் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொலையாளிக்கு ஜாமீன் வழங்குவதன் மூலம், தாங்கள் கொலையாளியால் தாக்கப்படுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை நீதி அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக Kimberlyயின் தந்தை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த வலி ஒருக்காலும் எங்களை விட்டு போகாது என்று கூறியுள்ள அவர், எப்படியோ எங்கள் வேதனையை தாங்கிக் கொண்டு வாழ பழகி விட்டோம், ஆனால் கனடாவின் நீதி எங்கள் காயங்கள் ஆறுவதை தடுத்து நிறுத்தியுள்ளது என்கிறார் அவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers