கனடாவில் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் உயிரிழந்ததாக பரவிய வதந்தியால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in கனடா

இன்று காலையே கிரிக்கெட் உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது அந்த செய்தி. இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா உயிரிழந்ததாக வந்த செய்திதான் அது.

பரபரவென சமூக ஊடகங்களில் செய்தி பரவ, சில கிரிக்கெட் வீரர்களே இந்த செய்தி உண்மையா என ட்விட்டரில் கேட்டிருந்தனர்.

டொராண்டோவில் கார் விபத்தில் ஒருவர் சிக்கியதாகவும் அவர் சனத் ஜெயசூர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது அந்த செய்தி.

அத்துடன், அவர் மிக மோசமாக காயமடைந்திருந்ததாகவும், சிகிச்சை பலனின்றி மறுநாள் காலையில் அவரது உயிர் பிரிந்ததாகவும் அந்த செய்தி கூறியது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த செய்தியை கனடாவிலுள்ள இலங்கை தூதரகம் உறுதி செய்துள்ளதாகவும் அந்த செய்தி கூறியது.

இந்த தகவல் ஜெயசூரியாவின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் காதுகளுக்கு எட்ட, ஜெயசூர்யாவே பின்னர் அந்த செய்தி குறித்து விளக்கமளித்தார்.

அது ஒரு போலி செய்தி என்று தெரிவித்துள்ள ஜெயசூர்யா, தான் நலமாக உள்ளதாகவும், தான் இலங்கையில் இருப்பதாகவும், சமீபத்தில் கனடா பக்கமே செல்லவில்லை என்றும் கூறியுள்ளார் அவர்.

அந்த செய்தி தங்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனால் அந்த செய்தியை பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers