விமானத்தில் வந்திறங்கிய கனேடியர்: பெட்டியை திறந்து பார்த்த அதிகாரிகள்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் விமான பயணி ஒருவரின் பெட்டியில் இருந்து மருத்துவத்திற்கு பயன்படும் உயிருள்ள அட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த குறித்த நபருக்கு 15,000 டொலர் அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 17 ஆம் திகதி ரஷ்யாவில் இருந்து கனடா வந்துள்ள இப்போலித் போடனோவ் என்பவரின் பெட்டியை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதில் அந்த பெட்டிக்குள் திரும்ப பயன்படுத்தக் கூடிய பைகளில் சுமார் 4,788 அட்டைகளை அவர் சட்டவிரோதமாக எடுத்து வந்துள்ளது தெரியவந்தது.

விமான நிலையத்தில் உள்ள மோப்ப நாயே போடனோவின் பெட்டிக்குள் இருந்த அட்டைகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது.

இதனையடுத்து கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, அந்த நபர் மீது வழக்குப் பதியப்பட்டது.

மேலும் கைப்பற்றப்பட்ட அட்டைகளை ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுமையை விரும்பும் மருத்துவப் பயிற்சியாளர்கள் இந்த அட்டைகளை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

கனடாவில் மருத்துவத்திற்கு பயன்படும் அட்டைகள் ஒன்றிற்கு 8 முதல் 20 டொலர்கள் வரையான கட்டணத்திற்கு விற்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் போடனோவ் குற்றவாளி என நிரூபணமானதால் அவருக்கு 15,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

கனடாவில் இதுபோன்ற சட்டவிரோத கடத்தல்கள் முதன்முறையல்ல. அரியவகை உயிர்கள் உள்ளிட்ட மிருகங்கள் கடத்தல் என்பது ஆண்டுக்கு 20 பில்லியன் டொலர் அளவுக்கு நடந்தேறுவதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers