அவர் இறந்தால் நன்றாக இருக்கும்: இளம்பெண் ட்வீட் செய்த சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய வீடு!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் கால்கரியில், அவர் இறந்தால் நன்றாக இருக்கும் என ஒரு இளம்பெண் ட்வீட் செய்த சிறிது நேரத்தில் வீட்டிற்குள் ஏதோ வெடித்துச் சிதற, அவரும் அவரது தந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் நடைபெற்றுள்ளது.

கால்கரியில் வசித்து வந்த ஒரு குடும்பத்தில் Heidar Dehdari, அவரது மூத்த மகள் Dorsa (22), அவரது தங்கை Dorna (15) ஆகியோர் வசித்து வந்தனர்.

Heidarஇன் மனைவி Leila சமீபத்தில்தான் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். ட்விட்டரில் அவ்வப்போது தனது தந்தை குறித்து Dorsa ட்வீட் செய்வதுண்டு.

அதேபோல் கடந்த சனிக்கிழமை காலை 11.55க்கு அவர் ட்விட்டரில், எனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து என் தந்தை சாக வேண்டும் என விரும்புகிறேன், அவரது சித்திரவதையை என்னால் தாங்க முடியவில்லை என ட்வீட் செய்திருந்தார்.

சுமார் 2 மணிக்கு ஏதோ வெடித்துச் சிதற, வீட்டுக்குள் தீப்பிடித்தது.

அவசர உதவிக்குழுவினர் வந்து பார்க்கும்போது Dorsaவும் அவரது தந்தை என கருதப்படும் ஒரு ஆணும் தீயில் கருகி உயிரிழந்து கிடந்தனர்.

Dorsaவின் தங்கை படுகாயமடைந்து வீட்டுக்கு வெளியே வீசப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது நிலைமை மோசமாக இருப்பதாக தெரிகிறது. பொலிசார் தாங்கள் யார் மீதும் சந்தேகப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தோழிகள் போல் அன்பாக இருக்கும் Dorsa, Dornaவின் வீட்டுக்கு உறவினர்களும் நண்பர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers