பெண் தன்னுடைய சொத்து என்று காட்டுவதற்காக கனேடியர் செய்த மோசமான செயல்!

Report Print Balamanuvelan in கனடா

டொராண்டோவைச் சேர்ந்த ஒரு நபர், தன்னுடைய சொத்து என்று காட்டுவதற்காக ஒரு பெண்ணின் முகத்தில் தனது பெயரை பச்சை குத்திய சம்பவத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் செய்த குற்றம் அந்த பெண் முகத்தில் பச்சை குத்தியது மட்டுமல்ல, அந்த பெண்ணை கடத்தி, தாக்கி, பாலியல் தொழிலுக்குள் அவர் தள்ளியதும்தான்.

கிட்டத்தட்ட ஒரு மாத தீவிர விசாரணைக்குப்பின் அந்த 23 வயது நபர், டொராண்டோவின் பாலியல் குற்றங்கள் மனித கடத்தல் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

Simon Ho-On (23) மற்றும் அவரது கூட்டாளியான Domenic Lees (24) இருவர் மீதும் ஏற்கனவே 21 மனித கடத்தல் வழக்குகள் உள்ளன.

ஜாமீனில் வெளி வந்திருந்த Ho-On மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் மீது 3 பாலியல் ரீதியான தாக்குதல்கள், ஆயுதம் கொண்டு பாலியல் ரீதியான தாக்குதல், மனித கடத்தல் மற்றும் விருப்பத்திற்கு மாறாக சிறைப்பிடித்து வைத்தல் உட்பட 14 புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட அந்த பெண் தனக்கு உரிமையானவள் என்பதைக் காட்டுவதற்காக, Ho-On அந்த பெண்ணின் முகத்தில் தனது பெயரை பச்சை குத்தி வைத்திருந்தான்.

அத்துடன் Ho-Onம் Domenicம் அந்த பெண்ணை பாலியல் தொழிலுக்காக பல்வேறு இணையதளங்களில் விளம்பரம் செய்திருந்தனர்.

அவள் எப்போதும் விழித்தே இருக்க வேண்டும் என்பதற்காக அவளுக்கு போதைப்பொருட்களும் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அந்த பெண் மட்டுமல்லாது மேலும் பலரும் இந்த நபர்களிடம் சிக்கியிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers