கனடாவில் மாணவிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்முறை: ஒரு அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in கனடா

சிறார் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரிக்கும் தேசிய தொண்டு நிறுவனம் ஒன்று, ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வது கனடாவில் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

வின்னிபெக்கை மையமாக கொண்ட கனேடிய சிறார் பாதுகாப்புக்கான மையம் ஒன்றின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த 17 மாதங்களில் மட்டுமே, 108 உறுதி செய்யப்பட்ட அல்லது நடந்ததாக சந்தேகிக்கப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பள்ளிகளில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது வாரத்திற்கு, ஒன்றுக்கும் மேலான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள். அந்த 108 சம்பவங்களில் 2018 ஜனவரி 01 இலிருந்து 36 சம்பவங்களில் குற்றம் நிகழ்ந்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்ற வழக்குகள் இன்னும் நீதிமன்ற வாசலை அடையவில்லை. 1997க்கும் 2017க்கும் இடையில் கனடாவில், பள்ளி ஊழியர்கள் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சுமார் 1,300 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

Anna Côté என்ற மாணவி 13 வயதாக இருக்கும்போது, ஒட்டாவா பள்ளி ஒன்றில் அவளுக்கு இசை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

2016இல் Phillip Nolan என்னும் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவரது ஆசிரியர் பணி செய்வதற்கான உரிமமும் பறிக்கப்பட்டது.

Anna ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை கவனித்த சில மாணவர்கள், அந்த ஆசிரியருக்கு இமெயில் அனுப்பி, எங்கள் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதை நிறுத்து என எச்சரித்துள்ளனர்.

மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை கவனித்த மாணவர்களே இப்படி உணர்ந்தால், பெரியவர்கள் ஏன் அதை கவனிக்கவில்லை என்கிறார் Anna.

என் மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும்போது, நிச்சயம் பள்ளியில் அதை தவிர்ப்பதற்கான கொள்கைகள் இருந்திருக்கத்தான் வேண்டும், ஆனால் அவை சரியான வகையில் செயல்படுத்தப்படவில்லை, காரணம் பெரியவர்கள் அதன் மீது கவனம் செலுத்தவில்லை என்கிறார் Annaவின் தாயான Shelagh MacDonald.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers