ஏரியில் விழுந்த சிறுமியை காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்து ஹீரோவான இளைஞர்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் கால்கரியை சேர்ந்த இளைஞர் ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியா ஏரி ஒன்றில் விழுந்த சிறுமியைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர்த்தியாகம் செய்து ஹீரோவாகியிருக்கிறார்.

கால்கரியைச் சேர்ந்த Jonathan Paul Stein-Palmiere (20) தனது காதலி மற்றும் அவரது குடும்பத்தினருடன் Windermere ஏரிக்கு சென்றிருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது காதலியின் தங்கை தண்ணீருக்குள் தவறி விழ, சட்டென்று எதையும் யோசிக்காமல் ஏரிக்குள் குதித்திருக்கிறார் Jonathan.

அவர் சிறுமியை பிடித்து தண்ணீருக்கு வெளியே வீச, மற்றவர்கள் அந்த சிறுமியை தண்ணீருக்கு வெளியே கொண்டு வந்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஆனால் Jonathanக்கு அந்த அளவுக்கு நீச்சல் தெரியாது என்பதால், அவர் தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்திருக்கிறார்.

மற்றவர்கள் ஒரு வழியாக அவரை தண்ணீரில் இருந்து எடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், சிகிச்சை பலனின்றி Jonathan பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

பின்னர் அந்த சிறுமியின் தந்தை Jonathanஇன் தாயாகிய Toni Palmiereஐ சந்தித்தபோது, அவரை அணைத்து, நான் வருந்துகிறேன், உங்கள் மகன் என் மகளைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்து விட்டார் என்று கூறினாராம்.

அதைக் கேட்ட Jonathanஇன் தாய், நீங்கள் ஏன் வருந்த வேண்டும், அவன் எப்போதும் செய்வதைத்தான் இப்போதும் செய்திருக்கிறான் என்கிறார்.

ஏனென்றால் Jonathan எப்போதுமே மற்றவர்களுக்கு உதவுவதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பாராம்.

Jonathanஇன் தாய் கூட, நீ எப்போதுமே மற்றவர்களைக் குறித்தே எண்ணுகிறாய், ஒரு மாற்றத்திற்காக கொஞ்சம் உன்னைக் குறித்தும் யோசி என்று கூறியதை கண்ணீருடன் நினைவு கூருகிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers