கனடா சாலையில் ஸ்பைடர் மேன் செய்த செயல்.. மக்கள் பரிதவிப்பு

Report Print Basu in கனடா

கனடாவில் ஸ்பைடர் மேன் உடை அணிந்த மர்ம நபர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டோராண்டோவிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

டோராண்டோவின் ஸ்பேடினா அவென்யூ மற்றும் குயின் தெரு பகுதிகளில், ஸ்பைடர் மேன் உடை அணிந்து வந்த மர்ம நபர், சாலையில் உள்ள ஸ்ட்ரீட்க்கார் கம்பிகள் மீது கயிறுகளை வீசியும், நடைபாதைகளில் வலை வீசியும் இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் நடந்து செல்லும் மக்களும் பாதிப்புக்குள்ளாகினர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த டோராண்டோ நகர பொலிசார், மர்ம நபரை அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலும், ஸ்ட்ரீட்க்கார் கம்பிகளுக்கும், நடைபாதைகளிலும் எந்த பாதிப்பும் இல்லை என பொலிசார் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers