வரலாற்றில் முதன் முறையாக கனடாவில் புதிய சட்டம் நிறைவேற்றம்.. அமலுக்கு வந்தது புதிய தடை

Report Print Basu in கனடா

வரலாற்றில் முதன் முறையாக கனடாவில் திமிங்கிலம் மற்றும் டால்பின்களை கூண்டில் சிறைப்படுத்தப்படுதலுக்கு தடை விதித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கனடா பாராளுமன்றத்தில் விலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதராவக வாக்களிக்கப்பட்டு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய தடையை மீறும் நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் படி 200,000 டாலர் அபராதமாக விதிக்கப்படும்.

கனடாவின் புதிய தடைக்கு மிருக நல ஆர்வலர்கள், பீட்டா அமைப்பினர், கனடாவின் கிரீன் கட்சி ஆகியோர் இதை வரவேற்றுள்ளனர்.

உலக நாடுகளுக்கு முன்னோடியாக, மிருகங்களுக்காக கனடா முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையை, ஒவ்வொரு நாடும் பின்பற்ற வேண்டும் என பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்