கனடாவில் பணி நேரத்தில் போதை மருந்தை திருடி நர்ஸ் ஒருவர் தமக்கே பயன்படுத்திக் கொண்ட விவகாரத்தில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
கனடாவின் டொராண்டோ பகுதியில் அமைந்துள்ள ராயல் விக்டோரியா பிராந்திய சுகாதார மையம் என்ற மருத்துவமனையிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று, ஏற்கெனவே போதை மருந்துக்கு அடிமையான நர்ஸ் ஒருவர், fentanyl என்ற போதை மருந்தை திருடி, கழிவறையில் வைத்து தமகே அதை பயன்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் நிர்வாகத்திற்கு தெரியவரவும், குறித்த செவிலியரை பணி நீக்கம் செய்துள்ளது அந்த மருத்துவமனை.
சில மாதங்களுக்கு பின்னர் பணியிடத்தில் திருடியதாக கூறி, குற்றவியல் நடவடிக்கையும் அவர் மீது முன்னெடுக்கப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்த அதே நாளில், குறித்த நர்ஸ் தமது நிலையை விளக்கி மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தவறான காரணத்திற்காக தம்மை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், தமது குறைகள் தெரிந்திருந்தும் நிர்வாகம் தம்மீது பாரபட்சம் காட்டுவதாகவும் அதில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மட்டுமின்றி, தம்மை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பணியில் இருந்து நீக்கிய நாட்களுக்கான ஊதியமும் வழங்க வேண்டும் என முறையிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு உறுதி செய்தது மட்டுமின்றி,
குறித்த நர்ஸ் மீது மருத்துவமனை நிர்வாகம் எந்த பாரபட்சமும் காட்டவில்லை எனவும், அவர் பணி நேரத்தில் திருடியது குற்றமே எனவும் தீர்ப்பு வழங்கியது.
இருப்பினும், குறித்த நர்ஸ் விவகாரத்தை விரிவான பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என கனேடிய செவிலியர்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தது.
இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், குறித்த நர்ஸ் மீது அந்த மருத்துவமனை நிர்வாகம் மறைமுக பாரபட்சம் காட்டியது தெரியவந்தது.
மேலும், போதை மருந்து பழக்கமே அந்த செவிலியரை திருட தூண்டியது எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி, பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.