முதல் NBA சாம்பியன்ஷிப்பை வென்ற டொராண்டோ ராப்டர்ஸ்

Report Print Arbin Arbin in கனடா

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடந்த NBA சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக டொராண்டோ ராப்டர்ஸ் அணி வெற்றிவாகை சூடியுள்ளது.

கலிபோர்னியா நகரில் இன்று நடந்த கூடைப்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கனடாவின் டொராண்டோ ராப்டர்ஸ் அணியும் அமெரிக்காவின் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியும் மோதியது.

இதில் டொராண்டோ ராப்டர்ஸ் அணி 114 புள்ளிகள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மட்டுமின்றி டொராண்டோ ராப்டர்ஸ் அணியானது சர்வதேச அளவில் பிரபலமான ஒரு கிண்ணத்தை வெல்வது இதுவே முதன்முறை.

மேலும், NBA சாம்பியன்ஷிப் போட்டிகளில் அமெரிக்க அணிகளை தவிர வேறு ஒரு அணி கிண்ணத்தை வெல்வது இதுவே முதன்முறை.

கடும் சவாலை எதிர்கொண்ட அமெரிக்காவின் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணி 110 புள்ளிகளை குவித்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

டொராண்டோ ராப்டர்ஸ் அணியின் இந்த மாபெரும் வெற்றி கனடா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers