தாய்ப்பாலூட்டிய இளம்பெண்ணுக்கு நீதிமன்றத்தில் இழைக்கப்பட்ட அநீதி!

Report Print Balamanuvelan in கனடா

இளம்பெண் ஒருவர் தனது மூன்று மாத குழந்தைக்கு பலூட்டியதற்காக, Montrealஇல் உள்ள ஒரு நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டதால் நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராகவே புகாரளிக்க முடிவு செய்துள்ளார்.

Callie Jones (19), தான் தனது மகளுக்கு பாலூட்டத் தொடங்கி சுமார் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே, நீதிபதி இருக்கைக்கு கீழ் இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் தன்னை ஒரு மாதிரியாக பார்த்ததாகவும், பாதுகாவலரை அழைத்து தன்னை சுட்டிக் காட்டி ஏதோ கூறியதாகவும் தெரிவித்தார்.

அவரிடம் வந்த பாதுகாவலர் நீதிமன்றத்தில் தாய்ப்பாலூட்ட அனுமதி இல்லை என்று கூறியதோடு, மற்றவர்கள் அசௌகரியமாக உணர்வதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதற்குள் குழந்தை பால் குடிப்பதை நிறுத்தி விட்டதால் அவர்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மற்றவர்கள் முன்பு தங்களை இப்படி நடத்தியது தன்னையும் தனது கணவரையும் அசௌகரியமாக உணரச் செய்ததாக தெரிவிக்கிறார் Callie.

இதனால் Callieயும் அவரது கணவரும் மனித உரிமைகள் அமைப்பில் புகாரளிக்க முடிவெடுத்துள்ள நிலையில், அரசியல் சாசன உரிமைகள் வழக்கறிஞரான Julius Grey, அவர்கள், வழக்கில் வெற்றி பெறுவது கடினம் என்கிறார்.

எல்லோருக்கும் தாய்ப்பாலூட்டுவதற்கு உரிமை உள்ளது என்றாலும், நீதிமன்றத்தை பொருத்தவரையில் கட்டுப்பாடுகள் உள்ளன என்கிறார் அவர்.

அதாவது நீதிமன்றத்தில் எப்படி உடை உடுத்த வேண்டும் என்னும் உடை கட்டுப்பாடுகளை நீதிபதி விதிக்க முடியும் என்கிறார் Julius Grey.

இதற்கிடையில் நீதிமன்ற ஊழியர்களிடம் கலந்தாலோசித்தபின் Montreal நகரம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், Callieயை நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்றும், அப்படி ஒரு எண்ணமும் அவர்களுக்கு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தனியிடத்திற்கு சென்று எந்த தொந்தரவுமின்றி பாலூட்டும் வசதியை செய்து கொடுப்பதற்காகவே நீதிமன்ற ஊழியரும், பாதுகாவலரும் Callieயை அணுகியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers