புலம்பெயர்தல் தொடர்பில் புதிய சட்டம்: கியூபெக் மாகாணத்தில் பெரும்பாலானோர் பாதிக்கப்படலாம்!

Report Print Balamanuvelan in கனடா

புலம்பெயர்தல் தொடர்பில் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றை கியூபெக் மாகாண சட்டசபை நேற்று நிறைவேற்றியுள்ளது.

அந்த மசோதாவின்படி புலம்பெயர்வோரை ஏற்றுக்கொள்வதற்கு, முன்பிருந்த முதலில் வருவோர் முதலில் ஏற்றுக்கொள்ளப்படுவார் என்னும் செயல் முறை மாற்றப்பட்டு, விண்ணப்பிப்பவரின் திறமைகளின் அடிப்படையில் மட்டுமே அவர் ஏற்றுக்கொள்ளப்படுவார் என தெரியவந்துள்ளது.

எப்படி அமெரிக்காவில் குடும்ப அடிப்படையில் புலம்பெயரும் விசா முறை மாற்றப்பட்டு, திறமையுள்ள பணியாளர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்ற திட்டத்தை ட்ரம்ப் முன்வைத்தாரோ, அதே போன்ற திட்டம்தான் இது.

இத்திட்டம், கியூபெக்கில் என்ன பணிக்கு ஆட்கள் தேவையோ, அந்த பணித்திறமை கொண்ட புலம்பெயர்வோரை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.

இன்னும் மோசமான செய்தி என்னவென்றால், இந்த புதிய சட்டத்தின்படி, ஏற்கனவே விண்ணப்பித்துள்ள சுமார் 18,000 பேரின் விண்ணப்பங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும்.

இத்திட்டத்தால் சுமார் 50,000 பேர் வரை, அதுவும் ஏற்கனவே கியூபெக்கில் வசிப்போர் உட்பட, பாதிக்கப்படுவர்.

குப்பையில் வீசப்பட்ட 18,000 விண்ணப்பங்களை விண்ணப்பித்தோர், மீண்டும் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

அப்படி அவர்கள் புதிதாக விண்ணப்பிக்கும்பட்சத்தில், தகுதி வாய்ந்த பணியாளர்கள், முன்போல் 36 மாதங்கள் வரை காக்கவைக்கப்படாமல், அவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் பதிலளிக்கப்படும் என மாகாண அரசு உறுதியளித்துள்ளது.

கியூபெக்கின் உள்துறை அமைச்சரான Simon Jolin-Barrette கூறும்போது, பொது நலன் கருதி, எந்த துறையில் தேவை இருக்கிறதோ அந்த தேவையை சந்திப்பதை உறுதி செய்யும் பொருட்டு, புலம்பெயர்தல் அமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்கிறோம் என்றார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers