ஏராளமான கனவுகளுடன் கனடாவுக்கு சென்ற இந்திய இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

Report Print Balamanuvelan in கனடா

பெற்றோர்கள் இறந்து விட, கனடாவுக்குச் சென்று வேலை செய்து எப்படியும் முன்னேறி விடலாம், தங்கையை கரையேற்றி விடலாம் என பல கனவுகளுடன் கனடா வந்த ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் Bathinda பகுதியைச் சேர்ந்தவர் Gurjot Singh, (20).

2002ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தொன்றில் அவரது பெற்றோர்கள் இருவரும் இறந்துவிட, அவரையும் அவரது தங்கை நவ்ரீத் கவுரையும் அவர்களது மாமா அவதார் சிங்தான்கவனித்து வருகிறார்.

14 மாதங்களுக்கு முன் கனடா வந்து, சர்வதேச ஆங்கில மொழி தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று, கம்ப்யூட்டர் புரோகிராமிங் கற்று வந்தார் Gurjot Singh.

இந்நிலையில் இந்தியாவிலிருக்கும் Gurjot Singhஇன் மாமா அவதார் சிங்கிற்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அதில் Gurjot Singhஇன் எதிரிகள் யாரோ அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு விட்டதாகவும், அதில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் கனேடிய பொலிசார் கூறியிருக்கிறார்கள்.

எதற்காக சுட்டார்கள் என்பது குறித்து அவர்கள் எதுவும் சொல்லவில்லை என்றும், Gurjot Singh மிகவும் நல்லவன் என்றும், அவனுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும் கூறுகிறார் அவதார் சிங்.

Gurjot Singh, Bramptonஇல் வசித்து வந்ததால், அங்குள்ள பஞ்சாபியர்களை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று அறிய முயன்று வருவதாக தெரிவித்தார் அவர்.

சமீப காலமாகவே Bramptonஇல் பல பஞ்சாபி இளைஞர்கள் கொல்லப்பட்டு வருவதாகவும், அதனால் கனேடியர்கள் தற்போது பஞ்சாபிகளுக்கு தங்கள் வீடுகளை வாடகைக்கு விடுவதில்லை என்று பிரபல பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்