வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற கனடியர் கொலை... வெளியான புகைப்படம்

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் Chile நாட்டுக்கு சுற்றுலா சென்ற போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்தியை La Tercera என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி பீட்டர் விண்டர்பெர்ன் என்பவர் தனது குடும்பத்தினருடன் Chile நாட்டின் Valparaiso நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

நேற்று மதியம் அவரின் பொருட்களை இரண்டு மர்ம நபர்கள் திருட முயன்ற போது நடந்த பிரச்சனையில் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்