கனடாவுக்கு தப்பியோடிய தமிழக கோவில் குருக்கள்.. காரணம் என்ன? அதிரவைத்த பின்னணி

Report Print Raju Raju in கனடா

காஞ்சிபுரம் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடி வழக்கில் தேடப்பட்ட கோவில் குருக்கள் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோமாஸ்கந்தர் சிலை செய்யப்பட்டது. இந்த சிலை செய்ததில் 100 கிலோவுக்கும் மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதில் ஏகாம்பரநாதர் கோவில் குருக்கள் ராஜப்பாவுக்கு (87) தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அறநிலையத்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் பொலிசார் ராஜப்பா குருக்களை தேடி வந்தனர். இதனால் ராஜப்பா குருக்கள் கனடாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து பொலிசார் நோட்டீஸ் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ராஜப்பா குருக்கள் கனடாவில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் காலையில் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் ராஜப்பா குருக்களை மும்பையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, ராஜப்பா குருக்களை அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பொலிசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers