நடுவானில் பழுதான எஞ்சின்: அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் கனடா விமானம்!

Report Print Balamanuvelan in கனடா

112 பயணிகளுடன் வான்கூவரிலிருந்து அலாஸ்காவுக்கு புறப்பட்ட ஏர் கனடா விமானம் ஒன்று, அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று திடீரென பழுதானதையடுத்து விமானி புறப்பட்ட இடத்துக்கே விமானத்தைத் திருப்பினார்.

விமானத்தில் பயணித்த மாண்ட்ரியலைச் சேர்ந்த பயணியான Katy Yacovitch, விமான பணிப்பெண்கள் குளிர்பானங்களை வழங்கத் தொடங்கி சிறிது நேரத்தில், விமான ஊழியர் ஒருவர் வித்தியாசமான நாற்றம் அடித்ததைக் கவனித்ததாகவும், உடனடியாக விமானத்தின் பின் பகுதியில் அமைந்திருக்கும் இருக்கைகளின் பின்னால் பொருத்தப்பட்டிருக்கும் திரைகள் செயலிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விமானம் அவசரமாக இறக்கப்படுவதாக விமானி அறிவிக்க, விமானத்தில் அவ்வப்போது அதிர்வு ஏற்பட்டுள்ளதை பயணிகள் உணர்ந்துள்ளனர்.

விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டபின்னர்தான், திடீரென விமானத்தின் ஒரு எஞ்சின் பழுதாகி விட்டதாகவும், ஒரு எஞ்சினின் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் விமானி தெரிவித்துள்ளார்.

தங்களை பயமுறுத்தாமல் பத்திரமாக தரையிறக்கியதற்காக விமான ஊழியர்களை பயணிகள் பாராட்டினர்.

பின்னர் பயணிகள் வேறொரு விமானத்தில் ஏற்றப்பட்டு 5 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர்.

ஏர் கனடா விமானம், ஒரு எஞ்சினுடனேயே பயணிக்கும் திறன் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers