கனடாவில் எந்த பகுதி மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளனர்: யாருக்கு முதலிடம்?

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் எந்த பகுதி மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர் என்பது தொடர்பில் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் கிழக்கு கடற்கரை மக்களே அதிக மகிழ்ச்சியுடன் காணப்படுவதாகவும், மட்டுமின்றி 55 வயதுக்கு பின்னரே பெரும்பாலான கனேடியர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை பகுதிக்கு அடுத்து கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒன்டாரியோ பகுதி கடைசி இடத்தை பிடித்துள்ளது. கனடாவில் பெரும்பாலான மக்கள் தங்களின் மகிழ்ச்சிக்கு காரணம் பணம் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜூன் 11 முதல் 17-ஆம் திகதிவரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிழக்கு கடற்கரை பகுதியில் சுமார் 56 சதவிகித மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பதிவு செய்துள்ளனர்.

கியூபெக் பகுதி மக்கள் 55 சதவிகிதம் எனவும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதி மக்கள் 52 சதவிகிதமும் மகிழ்ச்சி அளவை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அதிக வருவாய் ஈட்டும் மக்களே மிகுந்த மழ்கிச்சியாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்டுக்கு 80,000 டொலர் வருவாய் ஈட்டும் மக்களே மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக பதிவு செய்தவர்களில் 53 சதவிகிதம் பேர்.

இருப்பினும் 8 சதவிகித மக்களே தங்கள் மகிழ்ச்சிக்கு காரணம் பொருளாதார முன்னேற்றம் என்பதை பதிவு செய்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers