இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in கனடா

டொராண்டோவில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருந்த இளம்பெண்ணுக்கு இதயம் கிடைக்காததால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒண்டாரியோவின் கிராமப்புறத்தில் இருந்து இதய மாற்று சிகிச்சைக்காக டொராண்டோவிற்கு குடிபெயர்ந்தது Amanda Horst (14)இன் குடும்பம்.

Cardiomyopathy என்னும் இதயத்தை பலவீனப்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் Amanda.

தங்களது கால்நடைகளில் பெரும்பாலானவற்றை விற்ற Amandaவின் குடும்பம், இதய தானம் செய்யும் யாராவது கிடைத்தால் அறுவை சிகிச்சைக்கு உட்படுவதற்கு வசதியாக, டொராண்டோவில் உள்ள மருத்துவமனைக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருப்போரின் பட்டியலில் சமீபத்தில்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டார் Amanda.

இந்நிலையில் வெள்ளியன்று Amandaவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட Amandaவைக் காப்பாற்ற இயலவில்லை

தனது தோழிகளுடன் உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றிருந்த நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த Amandaவின் இறுதிச்சடங்கு இன்று மதியம் Bancroftஇல் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்