35 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கனேடிய பெண்மணி: நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் 8 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் ஒன்ராறியோ பெண்மணிக்கு முதன் முறையாக பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்மணி தமது புனர்வாழ்வு தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க தயாரானதன் பின்னரே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

கொலை வழக்கு தொடர்பில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 57 வயது அமினா சவுத்ரி, கடந்த 2016 ஆம் ஆண்டு ஒருநாள் மட்டும் பிணையில் வெளிவந்தார்.

அதன் பின்னர் அவருக்கு முழு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்து வந்துள்ளது. தற்போதைய தமது நிலைக்கு அடுத்தவர்களை குற்றஞ்சாட்டி வந்ததே அதற்கு காரணமாக கூறப்பட்டது.

மட்டுமின்றி, தாம் நிரபராதி எனவும் கூறி வந்துள்ளார். இதனிடையே கடந்த வாரம் சிறைதுறை அதிகாரிகளிடம் தமது நிலையை மேம்படுத்த தயார் என கூறியதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் வெளிப்படையாக அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க துவங்கியதையும் நல்ல முன்னேற்றமாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 1984 ஆம் ஆண்டு 8 வயதான தமது உறவினர் சிறுவனை கொலை செய்த வழக்கில் அமினா சவுத்ரி குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபணமானது.

ஆனால் சிறுவனை தாம் கொலை செய்யவில்லை என நிரூபிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers