உச்சி மாநாட்டில் அவமதிக்கப்பட்ட கனடா பிரதமர்: வைரலாகும் வீடியோ!

Report Print Vijay Amburore in கனடா

ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரேசில் மற்றும் சீன நாட்டு பிரதமர்களால் அவமதிக்கப்படுவதை போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உலகத் தலைவர்களின் வருடாந்திர ஜி 20 உச்சி மாநாடு இந்த வருடம் ஜப்பானில் நடைபெற்றது. வழக்கம் போல தலைவர்கள் அனைவரும் சிரித்த முகத்துடனே கைகொடுப்பதை அங்கிருந்த ஏராளமான காமிராக்கம் படம்பிடித்தன.

அந்த வரிசையில் ஒரு காமிராவில் பதிவாகியுள்ள காட்சியில், பிரேசில் மற்றும் சீன நாட்டு பிரதமர்களால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவமதிக்கப்படுவதை போன்று அமைந்துள்ளது.

தீவிர இடதுசாரி எதிர்பாளர்களான சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் பிரேசிலின் தலைவர் ஜெய்ர் போல்சனாரோவிற்கும் இடையில் ட்ரூடோவிற்கு இருக்கை கொடுக்கப்பட்டிருந்தது.

கைகுலுக்கலுக்காக சுற்றிலும் திரும்பி பார்த்த ட்ரூடோ பிரேசிலின் தலைவர் ஜெய்ர் போல்சனாரோவிற்கு கைகொடுக்க முயன்றார்.

ஆனால் அதனை நிராகரித்த பிரேசிலின் தலைவர் மறுபக்கமாக திரும்பிக்கொள்கிறார். இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து, நூற்றுக்கணக்கான இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers