உலகையே வியக்க வைத்து சாதனை படைத்த ஆர்டிக் நரி: மிரண்ட விஞ்ஞானிகள்

Report Print Basu in கனடா

76 நாட்கள், 3,506 கிலோமீட்டர் என உறை பனியில் நார்வே நாட்டிலிருந்து கனடாவிற்கு, பயணம் செய்து, ஒரு வயதுகூட நிறைவுபெறாத ஒற்றை பெண் ஆர்க்டிக் நரி சாதித்துள்ளது. இதை நம்ப முடியாத விஞ்ஞானிகள் மிரண்டு போயுள்ளனர்.

நார்வே போலார் இன்ஸ்டிட்டியூட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் சென்ற ஆண்டு மார்ச் மாத இறுதியில், அந்த நரிக்குட்டியின் கழுத்தில் ஜி.பி.எஸ் ட்ரேக்கர் கருவி ஒன்றை கட்டி அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.

தனது பயணத்தைத் தொடங்கிய ஆர்க்டிக் நரி, 21 நாட்களில் 1,512 கிலோ மீட்டர் பயணித்தது. 76 நாட்களுக்குப் பிறகு தனது பயணத்தின் இரண்டாம் பகுதியில் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து கனடாவின் எல்லெஸ்மியர் தீவை அடைந்தது.

நாளொன்றுக்கு சராசரியாக 46 கிலோ மீட்டரைவிடவும் சற்று கூடுதலான தொலைவைக் கடந்த அந்த நரிக்குட்டி, சில நாட்களில் 155 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்ததுள்ளது.

அது இறந்து விட்டது அல்லது ஏதாவது படகில்தான் எடுத்துச் செல்லப்படுகிறது என நினைத்தோம். இறுதியில் எங்கள் கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை என்று நார்வே போலார் இன்ஸ்டிட்டியூட்டை சேர்ந்த ஆய்வாளர் இவா பியூக்லேய் தெரிவித்துள்ளார்.

ஆர்க்டிக் குளிர் பகுதியின் மாறுபடும் தீவிரமான வெப்பநிலைகளில் நரிகள் எவ்வாறு வாழ்கின்றன என்பது குறித்த ஆய்வில் அவர் ஈடுபட்டுள்ளார்.கோடைக் காலங்களில் அதிக அளவில் உணவு கிடைக்கும். ஆனால், குளிர் காலங்களில் உணவு கிடைக்காது என்பதால் ஆர்க்டிக் நரிகள் இரை தேடி புலம் பெயரத் தொடங்கும்.

இந்த இளம் பெண் நரிக்குட்டி இதுவரை பதிவு செய்யப்படாத அளவு தூரத்தைக் கடந்துள்ளது. அந்த இளம் குட்டியின் வழக்கத்துக்கும் மீறிய திறமையை இது காட்டுகிறது என்று இவா கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers