கனடாவில் பெண்ணின் மூக்கை கடித்து துப்பிய பெண்: ரத்தக்களரியில் முடிந்த விருந்து

Report Print Arbin Arbin in கனடா

கனடாவில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஒருவர் இன்னொரு பெண்ணின் மூக்கை கடித்து துப்பிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கனடாவின் வடக்கு சஸ்காட்செவன் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

விருந்து கொண்டாட்டத்தில் மது போதையில் இருந்த இரு பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பு வரை சென்றுள்ளது.

இந்த நிலையில் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து கொள்ள வலியுறுத்தியதை அடுத்து, 40 வயதான ஜோன் மெக்கென்சி என்பவர் கேண்ட்ரா வெஸ்லி என்பவரை ஆரத்தழுவி சமாதானம் செய்துகொள்ள முன்வந்தார்.

ஆனால், அந்த வாய்ப்பை பயன்படுத்திய மெக்கென்சி, வெஸ்லியின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இந்த வழக்கில் இந்த ஆண்டு மார்ச் மாதம் மெக்கென்சி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.

இதனையடுத்து புதனன்று அவருக்கான தீர்ப்பு விவரங்களை நீதிமன்றம் வெளியிட்டது. இதில் மெக்கென்சிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த தமது மூக்கை வெஸ்லி இதுவரை இரண்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளார். மேலும் மூன்றாவது அறுவை சிகிச்சை இந்த மாதம் நடைபெற உள்ளதாக வெஸ்லி தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்