விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன், இறந்து விட்டதாக தெரிவித்த பொலிசார்: தந்தை வெளியிட்டுள்ள முதல் செல்பி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் 4 வயது சிறுவன் ஒருவன் விபத்தில் சிக்கிய நிலையில், அவன் இறந்து விட்டதாக பொலிசார் தவறுதலாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் உண்மையில், கை கால்கள் செயலிழந்து, கோமா நிலைக்கு சென்ற அந்த சிறுவன், தற்போது குணமடைந்து வருவதை உறுதி செய்யும் விதத்தில் அவனுடன் எடுத்துக் கொண்ட ஒரு செல்பியை அவனது தந்தை வெளியிட்டுள்ளார்.

விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது Radi மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஜோடி மோதிவிட்டு தப்பிச் சென்றது.

படுகாயமடைந்த Radiயைக் கண்ட பொலிசார், அவன் இறந்துவிட்டதாக தவறுதலாக தெரிவித்து விட்டனர்.

ஆனால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Radiயின் கை கால்கள் செயலிழந்ததோடு, அவன் கோமா நிலைக்கும் சென்றாலும், மருத்துவர்கள் மனம் தளராமல் தொடர்ந்து அவனுக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.

இந்நிலையில் தனது மகனுடைய உடல் நிலை முன்னேறி வருவதாக தெரிவித்துள்ள Radiயின் தந்தை Ruhul Chowdhury, விபத்துக்குப்பின் தனது மகனுடன் தான் எடுத்துக் கொண்ட முதல் செல்பியை வெளியிட்டுள்ளார்.

அவன் புன்னகைக்கிறான், ஒரு மாதத்திற்கு முன் நான் எதிர்பார்த்ததைவிட அவன் நன்கு குணமடைந்து வருகிறான் என்கிறார் Ruhul.

Radi அசைய தொடங்கியிருப்பதாகவும், கூப்பிட்டால் ரெஸ்பான்ஸ் செய்வதாகவும் தெரிவிக்கும் அவனது தந்தை, அவன் இறந்துவிட்டான் என்று பொலிசார் கூறியதை மட்டும் தன்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்.

Radi மீது மோட்டார் சைக்கிளால் மோதிவிட்டு தப்பிச் சென்ற Darren Dawson (31) மற்றும் அவருடன் பயணித்த Breanne Lynn Maclellan (32) என்னும் பெண் ஆகிய இருவரும், மறுநாள் CCTV கெமரா காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஜாமீனில் உள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்