பாகிஸ்தானில் அப்பாவி சிறுமிகளுக்கு நேரும் கதி.. மர்மத்தை வெளிச்சத்திறகு கொண்ட வந்த கனடா மக்கள்

Report Print Basu in கனடா

பாகிஸ்தானில் அப்பாவி இந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு நீதி கேட்டு கனடாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடாவில் இருக்கும் சிந்தி இந்துக்கள், மிஸ்ஸிஸ்சுக சதுக்கத்தில் கூடி, பாகிஸ்தானில் அப்பாவி இந்து சிறுமிகள் வலுகட்டயமாக மதமாற்றம் செய்யப்படுவதை நிறுத்த கோரியும், மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி அப்பாவி சிறுமிகளை கடத்தி, துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் வலுகட்டயமான மதமாற்ற சம்பவங்களால் சந்தி இந்துக்கள் மிகுந்த வேதனை அடைந்தள்ளனர் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இந்து சிறுமிகள் வலுகட்டயமாக மதமாற்றம் செய்யபடுவதை நிறுத்த வேண்டும். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். இந்து சிறுமிகளை கடத்தி வலுகட்டயமாக மதமாற்றுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்திய படி போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சமீபத்தில் ஆசிரியரால் கடத்தப்பட்ட இந்து சிறுமி பயல் குமாரிக்கு நீதி கேட்டும் போராட்டகாரர்கள் முழக்கமிட்டனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers