உடை மாற்றும் அறையில் கெமராவை மறைத்து வைத்த நபர் கைது!

Report Print Balamanuvelan in கனடா

டொராண்டோவில் உடைமாற்றும் அறைகளில் கெமராக்களை மறைத்து வைத்து பல பெண்கள் உடை மாற்றுவதை பதிவு செய்த ஒரு நபர் பொலிசில் சிக்கினார்.

டொராண்டோவில் 22 வயது ஆண் ஒருவர் பிரபல மால் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் ஆண் பெண் இருவருக்கும் பொதுவான உடை மாற்றும் அறை ஒன்றில் வீடியோ காட்சிகளை பதிவு செய்யும் சிறு கருவி ஒன்றை மறைத்து வைத்து விட்டு வந்துள்ளார்.

சட்ட சிக்கல் இருப்பதால் பெயர் வெளியிட இயலாத அந்த நபர், அந்த கருவியை அந்த அறையில் வைத்து விட்டு வந்தபின், அங்கு உடை மாற்ற வந்த ஒரு பெண் அந்த கருவியைப் பார்த்து சந்தேகமடைந்து பொலிசாரையும் கடையின் பாதுகாவலர்களையும் அழைத்துள்ளார்.

பொலிசார் வந்து அந்த கருவியை சோதித்த போது அதில் பல பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் பதிவாகியிருப்பதைக் கண்டுள்ளனர்.

அந்த நபரைக் கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது பெண்களுக்கு தெரியாமல் உடை மாற்றுவதை வீடியோ எடுத்ததாக 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளதோடு, சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers