கனடாவின் உயரிய விருது பெற்றவருக்கு வெளிநாட்டில் 16 ஆண்டுகள் சிறை: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in கனடா

கனடா அரசால் ஆதரிக்கப்பட்ட பிரபல சமூக ஆர்வலர் ஒருவருக்கு நேபாளத்தில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 5,000 அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடனாவின் உயரிய விருதுகளில் ஒன்றான Order of Canada விருது பெற்றவர் பிரபல சமூக செயற்பாட்டாளரான பீற்றர் டால்க்லிஷ்.

இவரே பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி நீண்ட 16 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.

டால்க்லிஷ் குற்றமற்றவர் எனவும், அவருக்கு எதிராக இந்த வழக்கு புனையப்பட்டது எனவும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர் நாடர் ஹசன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தண்டனை தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், டால்க்லிஷ் குற்றமற்றவராக வெளியே வருவார் எனவும் ஹசன் நம்பிக்கை தெரிவத்துள்ளார்.

62 வயதான டால்க்லிஷ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி இவரது குடியிருப்பில் வைத்து நேபாள பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் நேபாள சிறுவர்கள் 11 மற்றும் 14 வயதுடைய இருவரை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கைதாகும்போது இவரது குடியிருப்பில் இரு நேபாள சிறுவர்களும் இருந்துள்ளனர். நேபாளத்தில் உள்ள ஏழை சிறுவர்களை இலவச கல்வி, வேலை அல்லது வெளிநாட்டு பயணம் என ஆசைகளை தூண்டி தமது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers