மகனை தூங்க வைத்துவிட்டு மருத்துவமனை செல்ல முயன்ற கர்ப்பிணிப்பெண்: பின்னர் நடந்த சம்பவம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் ஒரு கர்ப்பிணிப்பெண் மூத்த குழந்தையை தூங்க வைத்துவிட்டு மருத்துவமனைக்கு செல்லும் முயற்சியில், படிக்கட்டிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Hall Beach பகுதியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான Ragilie Barnabasக்கு பிரசவ வலி தொடங்கியபோது, தனது மூத்த குழந்தையை தூங்க வைத்து விட்டு மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தார்.

ஒரு வழியாக அந்த பையனை தூங்க வைத்து விட்டு தனது காதலர் Tommy Javagiaqஉடன் மருத்துவமனைக்கு புறப்பட்டார் Ragilie.

கார் வந்து காத்திருக்க, காரில் ஏறுவதற்காக படிக்கட்டில் இறங்கும்போதே, Ragilieக்கு பனிக்குடம் உடைந்து விட்டது.

Ragilieயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த கார் ஓட்டுநர், பயந்துபோய் ஆம்புலன்சை அழைத்திருக்கிறார்.

அதற்குள் Ragilie தங்கியிருக்கும் போர்டிங் ஹோமிலுள்ள சமையலறை உதவியாளர் ஒருவர் நடந்ததைக் கண்டு டவலை எடுத்து வர ஓடியிருக்கிறார்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள் அந்த உதவியாளரின் உதவியுடன் ஒரு அழகான பெண் குழந்தையை Ragilie பெற்றெடுக்க, ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவிக் குழுவினரிடம் டவலில் பொதிந்த குழந்தையை கொடுத்திருக்கிறார் அந்த உதவியாளர்.

ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபின் வீடு திரும்பியிருக்கிறார் Ragilie.

தனது முந்தைய பிரசவங்களின்போதும் குழந்தை சீக்கிரம் பிறந்துவிட்டதாக தெரிவிக்கும் Ragilie, ஆனால் இந்த குழந்தை இப்படி படிக்கட்டிலேயே பிறக்கும் என எதிர்பார்க்கவில்லை என்கிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்