கனடாவில் லிப்டுக்குள் ஏறிய பெண்ணுக்கு நபரால் காத்திருந்த அதிர்ச்சி... பதறவைக்கும் வீடியோ

Report Print Raju Raju in கனடா

கனடாவில் லிப்டில் பெண்ணிடம் அடித்து பணத்தை திருடிய நபர் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொரண்டோவில் உள்ள குடியிருப்பு லிப்டுக்குள் 35 வயது பெண் ஒருவர் ஏறுகிறார்.

அப்போது லிப்டில் இருந்த நபர் அந்த பெண்ணின் பர்ஸை அடித்து பிடுங்க முயன்றார்.

இதையடுத்து அவருடன் அப்பெண் போராடியும் பர்ஸை திருடிய திருடன் அவரை லிப்டில் இருந்து வெளியில் தள்ளிவிட்டு தப்பியோடினான்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவன் மீது கொள்ளை, உடலில் காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த திருடன் வரும் 24ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளான்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்