சிங்கத்தின் அருகில் முத்தமிட்டுக் கொண்ட கனேடிய ஜோடி: சாபமிடும் மக்கள்!

Report Print Balamanuvelan in கனடா

தென்னாப்பிரிக்க சுற்றுலா ஒன்றின்போது, இறந்த சிங்கம் ஒன்றின் பின்னால் அமர்ந்து ஒரு கனேடிய ஜோடி முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படம் வெளியாகி கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது.

வைரலான அந்த புகைப்படம், பேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

அந்த புகைப்படத்தின் கீழ் அந்த தம்பதியின் பெயர் Carolyn மற்றும் Darren Carter என்றும் அவர்கள் எட்மண்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த புகைப்படம் ஒரு பக்கம் வைரலாக, மறு பக்கம் கண்டனங்களும் குவியத் தொடங்கின. உங்கள் அருவருப்பான புகைப்படங்கள் தலைப்புச் செய்தியாகியுள்ளன என்று எழுதிய Justa Kruger என்பவர், நீங்கள் ஹீரோக்கள் அல்ல, வில்லன்கள், உங்களால் பெருத்த அவமானம் என்று விமர்சித்திருந்தார்.

சிலர் ஒருபடி மேலே போய், விதி உங்களை சும்மா விடாது என சாபம் கொடுத்திருந்தனர். Carolyn மற்றும் Darren Carter இருவரும் விலங்குகளைக் கொன்று பாடம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கண்டனங்களும் சாபங்களும் குவிய, இருவரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும், தற்போது தனியாருக்கானது என மாற்றப்பட்டு விட்டன.

ஆனாலும் அவர்களது ட்விட்டர் கணக்கில் அவர்களது சுயபுராணம் தொடர்கிறது.

அதில், மீண்டு தென்னாப்பிரிக்கா வந்திருக்கிறோம், என்று எழுதியிருப்பதைப் பார்க்கும்போது கண்டனங்கள், விமர்சனங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் மீண்டும் தங்கள் வேலையை தொடங்கி விட்டது தெரிகிறது.

இது குறித்து கருத்து கேட்க முயன்றபோது, இருவரும் பதிலேதும் அளிக்கவில்லை.


மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers