மூன்று பேர் கொலையில் தொடர்புள்ளவர்களை தேடி சென்ற அதிகாரிகள்: கண்ட அதிரவைக்கும் காட்சி!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் மூன்றுபேர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரைத் தேடிச் சென்ற அதிகாரிகள் துருவக் கரடி ஒன்று நடமாடுவதைக் கண்டு அதிர்ந்தனர்.

அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணி Lucas Fowler, அவரது அமெரிக்க காதலி Chynna Deese மற்றும் தாவரவியலாளர் Leonard Dyck ஆகிய மூவரையும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் Kam McLeod மற்றும் Bryer Schmegelskyஎன்னும் இரண்டு இளைஞர்களை தேடி அலையும் கனேடிய பொலிசாரும் ராணுவ வீரர்களும், துருவக் கரடி ஒன்றின் தாக்குதலுக்குள்ளாகும் அபாய சூழலை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

அவர்களுடன் விமானப்படையும் இணைந்து, Gillam பகுதியிலுள்ள பயங்கர காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிவந்த ஒரு துருவக் கரடியின் புகைப்படத்தை கனேடிய பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் இருவரும் Gillam காட்டுப்பகுதியில் மறைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள் பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என உள்ளூர் மக்கள் எச்சரித்துள்ளனர்.

ஏனென்றால் Gillam காட்டுப்பகுதியானது, துருவக்கரடிகள், கருப்புக் கரடிகள், ஓநாய்கள், பயங்கர கருப்பு ஈக்கள் மற்றும் மோசமான கொசுக்கள், கீறல்கள், ஈரம் என பல்வேறு அபாயங்கள் நிறைந்த ஒரு பகுதியாகும்.

இந்த இருவரும் அபாயகரமானவர்கள் என்று தெரியாமலே, அவர்களுக்கு உதவிய யாரோ ஒருவரின் உதவியுடன், அவர்கள் Gillam காட்டுப்பகுதியிலிருந்தும் தப்பியிருக்கலாம் என்று தற்போது பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்