சீரியல் கில்லர்களை தப்பிக்க விட்டு விட்டேன்: கனேடிய பொலிசார் ஒருவரின் திக் திக் வாக்குமூலம்!

Report Print Balamanuvelan in கனடா

மூன்று பேரைக் கொன்ற கனேடிய சீரியல் கில்லர்களை கனேடிய பொலிசாரும் ராணுவமும் வலை வீசி தேடி வரும் நிலையில், அவர்களைக் குறித்த தகவல் எட்டாத பகுதியிலிருந்த ஒரு பொலிசாரிடமிருந்து அவர்கள் தப்பிச் சென்ற சம்பவத்தை திகிலுடன் விவரித்துள்ளார் அவர்.

கனேடிய பொலிஸ் துறை, ஜூலை மாதம் 23ஆம் திகதி, Kam McLeod (19) மற்றும் Bryer Schmegelsky (18) என்னும் இரு இளைஞர்களை மூன்று கொலைகள் தொடர்பாக தேடப்படுபவர்களாக அறிவித்தது.

Chynna Deese (24), Lucas Fowler (23) Leonard Dyck (64) ஆகிய மூவரும்தான் கொலை செய்யப்பட்டவர்கள்.

ஆனால், சரியாக ஜூலை மாதம் 22ஆம் திகதி, அதாவது அந்த இளைஞர்கள் சீரியல் கில்லர்கள் என அறிவிக்கப்படுவதற்கு முந்தின நாள், உள்ளூர் கான்ஸ்டபிளான Albert Saunders, McLeodஐயும் Schmegelskyயையும் Split Lake பகுதியில் சந்தித்துள்ளார்.

ட்ரக் ஒன்றில் வந்த இரண்டு இளைஞர்களின் வாகனம் செக்போஸ்ட் ஒன்றில் நிற்காமல் போகவே, அவர்களை தனது பொலிஸ் காரில் அவர் பின் தொடர, அவர்களே காரை ஓரமாக நிறுத்தியிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், அந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்திய வாகனம் திருடப்பட்டது என்பது அறிவிக்கப்படவும் இல்லை.

எனவே கான்ஸ்டபிள் Albert அவர்கள் வந்த வாகனத்தை சோதனையிட, அதில் சந்தேகத்திற்குரிய விதத்தில் எதுவுமே இல்லாததால், அவர்களை போக விட்டிருக்கிறார்.

ஆனால் அவர்கள் இருவரும் மிகவும் பயந்திருந்ததை மட்டும் கவனித்திருக்கிறார் அவர். பின்னர், அவர்கள் இருவரும் யார் என தெரியவந்தபோது, ஒரு வேளை அவர்கள் தன்னையும் சுட்டுக் கொன்றிருக்கக்கூட வாய்ப்பு உள்ளது என்று திகிலுடன் தெரிவித்துள்ளார் கான்ஸ்டபிள் Albert.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers