கனடா பேரணி ஒன்றில் இளம்பெண்கள் மேலாடையின்றி நடனமாட திட்டம்: சர்ச்சை ஏற்படுமா?

Report Print Balamanuvelan in கனடா
254Shares

கனடாவில் நடைபெற இருக்கும் புகழ் பெற்ற கார்னிவல் ஒன்றில் இளம்பெண்கள் மேலாடையின்றி நடனமாட திட்டமிட்டுள்ள நிலையில், அதனால் சர்ச்சை ஏற்படுமா அல்லது பெண்களின் உடல் குறித்த ஆரோக்கியமான இமேஜை அது உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சனிக்கிழமை நடைபெற இருக்கும், வருடாந்திர ரொரன்ரோ கரீபியன் கார்னிவல் என்னும் விழாவையொட்டி நடைபெற உள்ள பேரணியில், எப்போதுமே பெண்கள் உடல் தெரியும் வகையில்தான் உடையணிவார்கள்.

இந்த ஆண்டு அதையும் தாண்டி, சில பெண்கள் மேலாடையின்றி கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த திட்டத்தின் பின்னணியில் இருப்பவர் ரொரன்ரோவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான Yvonne Stanley.

பெண்கள் தங்கள் உடல் குறித்து என்ன நினைக்கிறார்கள், அதுவும் கருப்பினப் பெண்களிடையே தங்களது உடல் குறித்து எவ்வித எண்ணம் இருக்கிறது என்பதைக் குறித்த பேச்சைத் தொடங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஊடகங்கள் இன்னும் அதிகமாக கருப்பினப் பெண்களின் உடலைக் கொண்டாட வேண்டும் என்று கூறும் Yvonne, அதனால்தான், தான் ரொரன்ரோ கரீபியன் கார்னிவலை விரும்புவதாக தெரிவிக்கிறார்.

ஒன்ராறியோவைப் பொருத்தவரையில், பொது இடங்களில் பெண்கள் மேலாடையின்றி நடமாடுவது சட்டத்திற்குட்பட்டதுதான்.

Gwen Jacob என்ற ஒரு பெண் தெருவில் மேலாடையின்றி நடமாடியதையடுத்து பொலிசார் அவரை கைது செய்ய, அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்திற்கு சென்றார்.

நீண்ட காலம் நடைபெற்ற அந்த வழக்கில், பொது இடங்களில் பெண்கள் மேலாடையின்றி நடமாடுவது சட்டத்திற்குட்பட்டதுதான் என தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்றாலும் கூட பெண்களின் உடலை சமூகம் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது என்கிறார் Yvonne.

நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பவர்களில் ஒருவரான Ariam Eqbe என்னும் மொடல் கூறும்போது, மேலாடையின்றி பெண்கள் கார்னிவலில் பங்கேற்கும்போது, சில குடும்பங்கள் அதைப் பார்த்து அதிர்ச்சி அடையலாம் என்றாலும், சர்ச்சை இல்லாமல் எதுவுமே நடக்காது என்கிறார்.

அந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அது சாதாரண விடயம்தான், அது அழகு என்று சொல்லிக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார்.

நீங்கள் அந்த பேரணியில் மேலாடையின்றி கலந்து கொள்வீர்களா என்று கேட்டால், இல்லை, நான் செய்தியைச் சொல்லும் ஒரு தூதுவர் மட்டும்தான், பங்குபெறுபவர் இல்லை என்கிறார் Yvonne

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்