கனடாவில் ஆணுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த 28 வயது இளம்பெண்.. பின்னர் நடந்த சம்பவம்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் ஆணுடன் பைக்கில் சென்ற 28 வயது பெண் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கனடாவில் மணிடோபா மாகாணத்தில் ஆண் ஒருவருடன் 28 வயதான இளம் பெண் சென்றார்.

அப்போது அங்கிருந்த பாலத்தில் பைக் சென்று கொண்டிருந்த போது பாலத்தின் சுவற்றின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் வாகனத்தை ஓட்டிய நபர் காயமடைந்த நிலையில், பின்னால் உட்கார்ந்திருந்த பெண் படுகாயமடைந்தார்.

இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பைக்கை ஓட்டிய நபர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers