பிரபலமாவதற்காக கனேடிய இளம்பெண் செய்த மோசமான செயல்: ஒரு வைரல் வீடியோ!

Report Print Balamanuvelan in கனடா

இன்ஸ்டாகிராமில் பிரபலமடைவதற்காக இளம்பெண் ஒருவர் செய்த மோசமான செயல் வைரலான நிலையில், கனடா முழுவதிலிமிருந்து அவரது செயலுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

பிரபலமாவதற்காக தபால் பெட்டிக்குள் குளிர்பானத்தைக் கொட்டிய கனேடிய இளம்பெண் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.

கனடாவைப் பொருத்தவரையில் தபால் பெட்டியை சேதப்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், தபால் பெட்டியின் மூடியைத் திறக்கும் அந்த இளம்பெண், தனது கையிலிருக்கும் போத்தலிலிருந்த குளிர்பானம் முழுவதையும் தபால் பெட்டிக்குள் கொட்டி விட்டு, பாட்டிலுடன் வேகமாக அங்கிருந்து நகர்வது தெரிகிறது.

தபால் பெட்டிக்குள் இருந்த கடிதங்கள் எல்லாம் நாசமாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தபால் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் தபால் பெட்டியை சேதம் செய்வோருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

வெளியான அந்த வீடியோ விரைந்து வைரலான அதே நேரத்தில், அந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்துள்ள கனேடியர்கள் பலர், அந்த பெண்ணைக் கண்டுபிடித்து அவளை தண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்