கனேடிய சீரியல் கில்லர்கள் வழக்கில் அதிரடி திருப்பம்: கொலையாளிகள் பிணமாக கண்டெடுப்பு!

Report Print Balamanuvelan in கனடா

அவுஸ்திரேலியர் ஒருவர், அவரது அமெரிக்க காதலி மற்றும் தாவரவியலாளர் ஒருவர் என மூன்று பேரைக் கொன்ற கொலையாளிகள், பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியரான Lucas Fowler, அவரது அமெரிக்க காதலி Chynna Deese மற்றும் தாவரவியலாளர் Leonard Dyck ஆகியோர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மூவரையும் கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில், பொலிசார் Bryer Schmegelsky (18) மற்றும் Kam McLeod (19) என்னும் இரண்டு இளைஞர்களைத் தேடி வந்தனர்.

தங்கள் குடும்பத்தினர் இறந்து 15 நாட்களாகியும், பொலிசார் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை, அவர்கள் உண்மையாகவே குற்றவாளிகளை தேடுகிறார்களா என்னும் கோபக்குரல் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சார்பில் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், Gillam பகுதிக்கு அருகில், நெல்சன் நதிக்கருகிலுள்ள அடர்த்தியான புதரில் இரண்டு இளைஞர்களின் உடல்கள் நேற்று மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உடற்கூறு ஆய்வுக்கு பின்னரே அந்த உடல்கள் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இளைஞர்களுடையவை என உறுதி செய்யப்படும் என்றாலும், பொலிசார் அவை குற்றவாளிகளுடையவைதான் என உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் உடல்கள் கிடைத்துவிட்டாலும், விசாரணையை முடிக்கப்போவதில்லை என்று கூறியுள்ள பொலிசார், அவர்கள் இருவரும்தான் கொலையாளிகள், வேறு யாருக்கும் இந்த கொலையில் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்படும் வரை விசாரணை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

காரணம், கொலை செய்யப்பட்ட மூவரும் எதனால் கொல்லப்பட்டார்கள் என்ற விடயம் இதுவரையில் உறுதியாக தெரியவரவேயில்லை.

அதேபோல் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்ட கொலையாளிகளும் எப்படி உயிரிழந்தார்கள் என்பதும் உறுதியாக தெரியவில்லை.

உடற்கூறு ஆய்வுக்குப்பின் சில பயனுள்ள தகவல்கல் கிடைக்கலாம் என கருதப்படும் நிலையில், கொலையாளிகளின் உடல்களாவது சிக்கியதால் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஒரு சிறிய ஆறுதல் கிடைத்துள்ளது எனலாம்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers