கனடாவில் 3 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்த 30 கேபிள் கார்கள்..!

Report Print Kabilan in கனடா

கனடாவின் சுற்றுலாத்தளம் ஒன்றில் கம்பி அறுந்து 30 கேபிள் கார்கள் பல அடி உயரத்தில் இருந்து விழுந்து சேதமடைந்தன.

British Columbia மாகாணத்தில் இருக்கும் வான்கூவர் நகரின் ஹொவே சவுண்ட் பகுதிக்கு அருகே, The Sea to Sky Gondola என்ற கேபிள் கார் மூலம் அப்பகுதியை சுற்றிப்பார்க்கும் இடம் அமைந்துள்ளது.

இது சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில், இந்த கேபிள் கார்கள் கடலின் மேல் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காரிலும் 8 பேர் வரை அமர்ந்து சென்று, கடல் மற்றும் சுற்றி உள்ள அருவி உள்ளிட்டவற்றை பார்த்து ரசிக்கலாம்.

இந்நிலையில், நேற்றைய தினம் இந்த கேபிள் கார்கள் இணைக்கப்பட்டிருந்த 2 அங்குலம் திடமான கம்பி அறுந்தது.

இதனால் அதில் இணைக்கப்பட்டிருந்த 30 கார்கள் கீழே விழுந்து சேதமடைந்தன. இச்சம்பவம் நடந்தபோது கேபிள் கார் சேவை இயக்கப்படவில்லை என்றும், இதில் யாரும் காயம் அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குவதற்காக கேபிள் அறுக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

THE CANADIAN PRESS/Darryl Dyck

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers