மருத்துவமனையில் தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதால் உயிரிழந்த கனடியர்.. வெளியான பின்னணி தகவல்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் கடந்த 2017-ல் முதியவர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், செவிலியர்கள் அவருக்கு தவறான மருத்துகள் கொடுத்ததே அதற்கு காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பான முழு அறிக்கையை உடற்கூறாய்வு செய்பவரான பவுலி வெளியிட்டுள்ளார்.

அதன்படி Gatineau நகரை சேர்ந்த வில்லியம் மடையர் (85) என்பவர் உடல்நலம் மற்றும் மன நல கோளாறு காரணமாக அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே அறையில் பெண் நோயாளி ஒருவரும் பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை தவறுதலாக வில்லியமுக்கு செவிலியர்கள் கொடுத்துள்ளனர்.

நோயாளி குறித்து சரியாக ஆராயாமல் அவர்கள் செய்த செயலால் வில்லியம் உயிரிழந்துள்ளார்.

அதாவது அந்த மருந்தின் வீரியம் காரணமாக இரண்டு நாட்கள் சுயநினைவை இழந்த வில்லியம் பின்னர் மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு இதில் ஈடுபட்ட செவிலியர் மற்றும் துணை செவிலியர் ஆகியோரை அவர்களின் தொழில்முறை அமைப்புகளுக்கு விசாரணைக்கு அனுப்புமாறும் பவுலி அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் இது தொடர்பாக பதிலளிக்க செவிலியர்களுக்கான தொழில்முறை அமைப்பு முன்வரவில்லை.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்