வெளிநாட்டில் கனேடிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: உயிர் தப்ப வெறுங்காலுடன் ஓடிய சோகம்!

Report Print Balamanuvelan in கனடா

நியூசிலாந்தில் பணியாற்றிய கனேடிய இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு சென்றிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவர்கள் வாகனத்திற்குள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது காதலர் உயிரிழந்தார்.

கனடாவைச் சேர்ந்த Bianca Buckley (32) தனது காதலரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Sean McKinnon (33)உடன் சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு செல்லும் வழியில், ஓரிடத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு இருவரும் தூங்கியிருக்கிறார்கள்.

நேற்று விடியற்காலை 3 மணியளவில் மர்ம நபர் ஒருவர் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த வாகனத்திற்குள் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

அதில் Seanக்கு பலத்த காயம் ஏற்பட, வாகனத்திலிருந்து இறங்கிய Bianca வெறுங்காலுடன் உதவி கோர ஓடியிருக்கிறார்.

அதற்குள் அந்த மர்ம நபர் வாகனத்தை ஓட்டிக்கொண்டு தப்பியிருக்கிறார்.

பின்னர் காலை 8 மணியளவில் Sean இருந்த வாகனம், அவர்கள் தாக்கப்பட்ட இடத்திலிருந்து 75 கிலோமீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை ஆய்வு செய்யும்போது Seanஇன் உடல் வாகனத்திற்குள்ளேயே இருந்திருக்கிறது.

Sean துப்பாக்கியால் சுடப்பட்டபோதே தனது காயங்களால் இறந்தாரா அல்லது மீண்டும் அந்த மர்ம நபர் அவரை சுட்டுக் கொன்றாரா என்பது தெரியவில்லை.

இதற்கிடையில் கொலை நடந்த சிறிது நேரத்திற்குள்ளேயே, நியூசிலாந்து பொலிசார், சம்பவம் தொடர்பாக 23 வயது இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளார்கள்.

அவர் மீது கொலை, கொலை மிரட்டல் மற்றும் கொள்ளை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெயர் வெளியிடப்படாத அந்த நபர் இன்று நியூசிலாந்து நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்