கனடாவில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு தெற்காசிய பெண்கள் மாயம்!

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த இரண்டு தெற்காசியப் பெண்கள் மாயமாகியுள்ளனர்.

திங்கட்கிழமை Barinder Kaur (34) என்ற பெண் Bramalea தெரு பகுதியிலிருந்து மதியம் 1 மணியளவில் காணாமல் போயிருக்கிறார்.

அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவர் திடீரென மாயமானதால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

5 அடி 1 அங்குலம் உயரம் கொண்ட அவர் ஒரு தெற்காசியர் என்றும் பழுப்பு நிறக் கண்களும், நீண்ட கருமையான தலைமுடியும் கொண்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் Lovleen Dhawan (27) என்ற இளம்பெண்ணும் ஆகத்து மாதம் 14ஆம் திகதி மதியம் 1 மணியளவில் McLaughlin தெரு பகுதியிலிருந்து மாயமாகியுள்ளார்.

அவரும் ஒரு தெற்காசியரென்றும், ஒல்லியான உடல்வாகும், 5 அடி 7 அங்குலம் உயரமும், தோள்பட்டை வரை நீண்ட கருமையான தலைமுடியும் கொண்டவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Lovleenக்கு சொந்தமான கார் சாவிகளை கண்டெடுத்த மலையேற்றத்திற்கு சென்ற இரண்டு இளம்பெண்கள் அவற்றை அங்கிருந்த சிலரிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.

பொலிசார் இந்த இரண்டு இளம்பெண்களையும் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...